விசுவல் ப்ரொடக்சன்


  • வீடியோ டிவிடி-க்களில் விரும்பிய காட்சிகளைக் காண பட்டன் சிஸ்டம்
  • தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் டப் செய்யப்பட்ட வீடியோவை காணும் வசதி
  • தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் சப்-டைட்டில்கள்
  • நிறுவனத்தின் தோற்றத்திற்கேற்ற தீம்-ல் வீடியோ டிவிடி-ஐ கார்பரேட் தரத்தில் கட்டமைக்கும் வசதி
  • அப்ளிகேஸன்கள் மற்றும் கொட்டேசன்களுடன் இலவசமாக விணியோகிக்கலாம்.
  • தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பலாம்.
  • கூட்டங்களில் மக்களுக்குப் போட்டுக்காட்டலாம்.
  • எல்லா டிவிடி பிளேயர்களிலும் தங்கு தடையின்றி இயங்கும்.
[ மாதிரிகள் கீழே ]


வெறும் அறுபது நொடிகளில் காட்டப்படும் விளம்பரங்களில் சொல்லவந்த எல்லா தகவல்களையும் அடக்கிவிடமுடியாது. இதை உணர்ந்தே சில நிறுவனங்கள் அரை மணி நேரம் ஓடக்கூடிய டாக்குமெண்டரிகளை உருவாக்கத் திட்டமிடுகின்றன. டாக்குமேண்டரியின் எல்லா விசுவல் வேலைகளும் முடிந்ததும் அந்த அரை மணி நேர காட்சியமைப்புகளில் எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறார்கள். ஆனால் எல்லோருக்கும் அரை மணி நேரம் முழுவதுமாக ஒதுக்கி, ஒரு நிறுவனத்தின் எல்லா தகவல்களையும் கேட்டறிய பொறுமையோ, நேரமோ இருப்பதில்லை. தனக்கு எந்தத் தகவல்கள் வேண்டுமோ அதை உடனடியாக சொல்ல முடியுமானால், கேட்கலாம் என்பதுவே யார் ஒருவரின் கருத்தாகவும் இருக்கின்றது. அப்படியானால், விசுவல் டாக்குமெண்டரிகளாலும் எந்தப் பயனும் இல்லை தானா?

வெர்லாக்கென் க்ரியேசன்ஸ் அதற்க்கும் தீர்வு தருகின்றது. வெர்லாக்கென் க்ரியேசன்ஸ் உங்கள் டாக்குமெண்டரிகளை எளிதில் தேவையான காட்சிகளைப் பார்க்கும்படியாகப் பகுத்துத் தருகின்றது. மேலும், பிரஃபசனல் லுக் கொடுப்பதால் நிறுவனத்தின் நம்பகத்தன்மை அதிகரிக்கின்றது. தொழிற்த்துறையில் நிரந்தரமான அந்தஸ்தை பிராண்டிங் உங்களுக்குப் பெற்றுத்தந்து விடுகின்றது. மேலும், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சப் டைட்டில்கள் மற்றும் டப்பிங் பணிகளும் நிறைவு செய்யப்பட்டு, மெனுக்கள் அமைத்து டிஜிட்டல் ஒளி, ஒலி தரத்தில் உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரிஜினல் கார்ப்பரேட் விசுவல் டிவிடிக்களாக தரப்படுகின்றது. இதனால், சொல்ல வந்த தகவல்கள் மாநில, தேசிய, சர்வதேச அளவிளான எல்லா தரப்பு மக்களுக்கும் எளிதில் புரியும் வண்ணம் சென்றடைகின்றன. சிடி பவுச் மற்றும் சிடி ஸ்டிக்கர்கள் நிறுவனங்களுக்கான பிரத்தியேகத் தயாரிப்பாக இருப்பது நிறுவனத்தின் நன்மதிப்பையும், கெளரவத்தையும் சர்வதேச அளவிற்கு உயர்த்திவிடுகின்றது. அவரவர்கள் அவரவர்களுக்கான தேவைகளை பிரிதரிகிற வசதியுடன் பெறுவதால் வாடிக்கையாளர்கள் எளிதில் தங்களுக்கான தகவல்களைப் பெற்றுக்கொள்கின்றார்கள். என்று இவையெல்லாம் சாத்தியமோ, அப்போது நிறுவனங்களின் நம்பகத் தன்மையும், வருமானமும் அதிகரிக்கும் என்பதும் நூறு சதம் சாத்தியம் தானே.

இப்போது இந்த டிவிடிக்களை உங்கள் வடிக்கயாளர்களுக்கு கொட்டேஸசன்கள், அப்பிளிக்கேசன்கள், பிரவுச்சர்களுடன் இணைப்பாகக் கொடுங்கள். அந்த ஒரு டிவிடி உங்கள் வியாபாரத்தின் போக்கை மாற்றும். வாடிக்கையாளர்களை அதிகரித்து வருவாய் பன்மடங்கு பெருக, அதுவே உங்களுக்கு வழிகாட்டிவிடும். உங்கள் வாடிக்கையாளர்களின் மூலமாகவே உங்கள் நிறுவனம் விளம்பரம் செய்யப்பட்டுவிடும். ஒரு டிவிடி பல டிவிடிக்களாக உருவெடுக்கும். டிவிடி காட்சிகளைத் தொலைக்காட்சிகளிலும், வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சிகளிலும் போட்டுக்காட்டுங்கள். அதனால் ஏற்படும் ஜனரஞ்சகமான பிரபலம் உங்கள் நிறுவனத்தை சமூகத்தில் நம்பர் ஒன்னாக உயர்த்த வழிவகுக்கும். இப்போது எந்த ஒரு வாடிக்கையாளரும் உங்களை தவிர்க்க மாட்டார்கள் தானே.



விசுவல் ப்ரொடக்சன் மாதிரிகள்


பொதுப்பணித் துறை, நீர்வள ஆதார அமைப்பு,
மதுரை மண்டலம், மதுரை -2
விரகனூர் மதகணைப் பூங்கா, மதுரை - மறுசீரமைப்புத் திட்டம் 2010



விளக்கம்

பொதுப்பணித் துறை, நீர்வள ஆதார அமைப்பு, மதுரை மண்டலம் சார்பில் விரகனூர் மதகணைப் பூங்கா, மதுரை - மறுசீரமைப்புத் திட்டம் 2010 விசுவல் ப்ரொடக்சன் ப்ராஜக்ட் பெறப்பட்டு நவீன வசதிகளுடன் டிவிடி வீடியோ தயாரித்துத் தரப்பட்டது. பூங்காவின் ஒவ்வொரு அங்கங்களும், புதிதாக அமைத்தால் எப்படி இருக்கும் என்று பல்வேறு புனைவுகளையும், கண் முன் நிறுத்தினோம். ஹாய் குவாலிட்டி டிவிடி வீடியோவாக, டிஜிட்டல் ஸ்டீரியோ தரத்தில் தயாரித்துத் தந்தோம்.

புதர் மண்டிக் கிடக்கும் இடங்கள், புனரமைக்கப்பட்ட பின் எப்படி இருக்கும் என்று சிந்தித்து, கற்பனை செய்து அதை காட்சிப்படுத்திக் காட்டினோம். நீரூற்று, பூச் செடிகள், புல் தரைகள், விலங்குகளின் சிலைகள், விளையாட்டுக் கருவிகள், ஓய்விடம், என்று ஒவ்வொரு இடத்தையும் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து, அவ்விடங்களை நிஜமாக உருககொனர்ந்து, வீடியோவாக உருவாக்கினோம். புதர் மண்டிக் கிடக்கும் இடங்களின் படங்களை பின்புலமாகக் கொண்டு அவ்விடத்தின் புதிய அமைப்பை உருவாக்கினோம். சில இடங்களில் அதிகமாக புதர் மண்டிக் கிடந்ததால், பின்புலமாக வைத்து உருவாக்க படங்கள் உதவவில்லை. அந்த சமயத்தில் பூங்காவின் வரைபடத்தை பின்புலமாக வைத்து, அதைக் கொண்டே புதிய உருவாக்கங்களை எழுப்பினோம்.

இறுதியில் அதற்கு மிகச் சரியான ஸ்கிரிப்ட் தயார் செய்து, பின்புலத்தில் ஆண் குரல் கமண்டரி கொடுக்க, புனைவின் ஒவ்வொரு அம்சமும் வாசிக்க, வாசிக்க, அடுத்தடுத்து வாசித்தபடியே தற்போதய இடம் எப்படி மாற்றம் பெறுகிறது என்பதை படிநிலைகளாக உருவாகும்படியாக செய்து கொடுத்தோம். அதுமட்டுமா?

டிவிடி இயங்கும் முன்னர் டைட்டில் அனிமேசன் இடம்பெறும். முடிந்ததும், இயக்கு, காட்ச்சிகள் என்ற இரண்டு பட்டங்கள் அதே தீமில் இடம்பெறும். இயக்கு என்ற பட்டனை அழுத்தினால் இயங்க ஆரம்பிக்கும். காட்சிகள் பட்டனில் அழுத்தினால் முன் சுருக்கம், இடது பூங்கா, வலது பூங்கா, தீர்வு என்று ஓவ்வொரு அமைப்பையும் பகுதிவாரியாக பிரித்து இயக்க வழிவகை செய்யப்பட்டது. சப் டைட்டில்கள் இடம்பெற்றன. இத்துடன் அந்த டிவிடி ஒரு கார்ப்பரேட் நிறுவன டிவிடிக்கான அத்தனை அம்சங்களுடனும் தயாரிக்கப்பட்டது. மேலும், டிவிடி ஸ்டிக்கர், டிவிடி பவுச் ஆகியனவும் அதே தீமில் வடிவமைக்கப்பட்டு முழுமையான, தரமான, மதிப்புவாய்ந்த,  டிவிடியாக சமர்ப்பிக்கப்பட்டது.

டிவிடி மற்றும் பவுச்


டிவிடி மெனு - அதே தீம் வடிவமைப்பில்



டிவிடி காட்சி வகை பகுப்பு - அதே தீம் வடிவமைப்பில்



உதாரணத்திற்காக தொகுப்பிலிருந்து சில காட்சிகள்







பொதுப் பனித் துறை, நீர் வள ஆதார அமைப்பு,
மதுரை மண்டலம், மதுரை - 2,
வைகை ஆணை பூங்கா பகுதி மறு சீரமைப்புத் திட்டம், 2010.



விளக்கம்

கையில் எடுக்கும் பொது இந்த பிராஜக்ட் கொஞ்சம் கடினமானதாகத் தான் இருந்தது. பல ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தில் பிரம்மாண்டமாக பூங்கா பகுதிகள் அமைக்கப்பட்டு அனைத்தும் இப்போது சீரமைக்கப்படவேண்டிய நிலையில் இருக்கின்றன. மதுரை ஆண்டிப்பட்டியில் அமைந்துள்ள இந்த அணைப்பகுதி தற்போது மதுரை மற்றும் தேனீ பகுதி மக்களின் சுற்றுலா தளமாக மட்டுமே இருந்து வருகின்றது. இதனை மதுரைக்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகள் மற்றும் பிற மாவட்ட, மாநில சுற்றுலா பயணிகளுக்குமான மிகச் சிறந்த சுற்றுலா தளமாக மாற்றுவதே நோக்கம். எனவே புனைவுகள் அனைத்தும் மிக திறம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படியே, பூங்காவின் ஒவ்வொரு அங்கங்களும் புகைப்படம் எடுக்கப்பட்டன. அந்த புகைப்படங்களில் மாற்றம் செய்யப்படவேண்டிய அம்சங்கள் குறித்துக்கொள்ளப்பட்டன. தற்போதய நிலையில் உள்ள இடம், குறிக்கப்பட்ட மாற்றங்கள் நிறைவு செய்யப்பட்டுவிட்டால் எப்படி காட்சி அளிக்கும் என்பதை, தத்ரூபமான புனைவாக கட்டவேண்டும் என்பது கட்டளை. அதன்படியே பல பரிமாணங்களிலும் சிந்தித்து செய்யப்படவேண்டிய புனைவுகள் ஆய்வு செய்யப்பட்டு குறிக்கப்பட்டன. குறிக்கப்பட்ட ஒவ்வொரு அம்சங்களும் சிதைவுறாவண்ணம் நினைத்தபடியே தத்ரூபமாக கிராஃபிக்ஸ் தொழில் நுட்பத்தில் புனைவு வேலை செய்யப்பட்டு, மாற்றங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டால் எப்படி இருக்கும் என்பது கண்முன் காட்சிப் படமாக நிறுத்தப்பட்டது. இடத்திற்கு ஒரு வாசகம், புல் தரை, சுற்றுக் கற்கள், வண்ணப் பூச்சு, சுற்றுத் தாவரங்கள், நீரூற்று, நீர்த் தாவரம் வளர்த்தல், மின்னொளி விளக்கு, ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைத்தல், சிலைகள் சீரமைப்பு, சிலைகளின் பகுதிகளில் இருந்து நீரூற்று வழியும் அமைப்பு உள்ளிட்ட பல அம்சங்களும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டு கண்முன் புனைவென்றே சொல்ல முடியாத அளவிற்கு, தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டன. இறுதியில் அவை அனைத்தும், மாற்றவேண்டிய அம்சங்கள் குறிக்கப்பட்ட படம், தற்போதய இடத்தின் நிலை படம், மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டபின் மாற்றமடையும் நிலைக்கான காட்சிப் படுத்தப்பட்ட தத்ரூபமான புனைவுப் படம் என்ற வரிசையில் படங்கள் தரநிலைப் படுத்தப்பட்டு டிரான்சிஷன் எஃபக்ட்டுகளுடன் சிலைட் ஷோவாக உருவாக்கப்பட்டு, பின்புலத்தில் மெல்லிய இசை கேட்குமாறு எடிட் செய்யப்பட்டு, ஒரு கார்ப்பரேட் தர விசிடியாக கொடுக்கப்பட்டது. இதை வைத்துக் கொண்டே, பொதுப் பணித் துறையில் பல கோடிகளுக்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டங்கள் வகுக்கப் படுகின்றன. 


விசிடி மற்றும் பவுச்




உதாரணத்திற்காக தொகுப்பிலிருந்து சில காட்சிகள்