இ-பிரவ்ச்சர்


  • படங்கள், வீடியோ மற்றும் ஆடியோ ஃபைல்கள் இணைக்கும் வசதி.
  • அனிமேட்டட் பக்கங்கள் மற்றும் கிரியேட்டிவ் பட்டன்கள்
  • எல்லா விண்டோஸ் கம்ப்யூட்டர்களிலும் எளிதில் இயங்கும்.
  • இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை.
  • அப்ளிகேஸன்கள், கொட்டேஸன்களுடன் சிடி-யினை இலவசமாகக் கொடுக்கலாம்
[ மாதிரிகள் கீழே ]

வாடிக்கையளர்கள் தம் உற்பத்திப் பொருளையோ அல்லது தாம் வழங்கி வரும் சேவைகளையோ மக்களிடம் புரியும் வண்ணம் எடுத்துரைக்க விரும்புகிறார்கள். அச்சு வூடக பிரசுரங்களால் சிலத் தகவல்களை புரியும் வண்ணம் எடுத்துக் கூற முடிகின்றது. ஆனால், அவைகள் சம்பந்தப்பட்ட தகவல்கள் வெறும் எழுத்து வடிவில் இருந்தால் மட்டும் போதாது என்றும், அதை எடுத்துக் காட்டும் வண்ணம் சில விசுவல் படங்களும் இடம்பெற்றால் நன்றாக இருக்கும் என்றும் எண்ணுகிறார்கள். எனவே விசுவல் படத் தயாரிப்பில் இறங்குகிறார்கள். இப்போது எழுத்து பூர்வமாக சொல்ல முடிந்த சிலத் தகவல்களைக் காட்சிப்படுத்துதல் சுலபமல்ல என்பதை உணர்கிறார்கள். எனவே, அச்சுப் பிரசுரத் தகவல்களும், தேவையான இடங்களில் விசுவல் தகவல்களும் இடம்பெற்றால் மிகச்சிறந்த தீர்வாக அமையும் என்று எண்ணுகிறார்கள். ஆனால், பிரவ்ச்சர்களில் விசுவல் தகவல்களையோ, டிவிடிக்களில் எழுத்து பூர்வமான தகவல்களையோ கச்சிதமாகத் தந்துவிடமுடியாது. விசுவல் காட்சிகளும், எழுத்துபூர்வமான தகவல்களும் கைகோர்க்குமானால் மிகச்சிறப்பான விளைவுகளை ஏற்ப்படுத்த முடியும். கூடவே தேவையான தகவல்களை உடனுக்குடன் பார்த்துக்கொள்ளும்படியாக பட்டனை அழுத்தியதும் அதற்க்கான தகவல்கள் கிடைத்துவிடுமானால் அதைவிட தொழிலை வளப்படுத்த மிகச் சிறப்பான கருவி வேறெதுவுமில்லை. தொழிலுக்கான நோக்கத்தை விரைவாகவும், மிக எளிதாகவும் அடைந்துவிடமுடியும். சொல்லவந்ததை அப்பட்டமாகவும், பகிரங்கமாகவும் எல்லோருக்கும் எளிதில் புரியும்படியாகவும், நினைத்ததை நினைத்தபடியும் சொல்லிவிடமுடியும். அப்படியானால், எழுத்தும் காட்சியும் கைகோர்க்கும் அந்தப் புள்ளி எங்கே சாத்தியமாகும்?

இதை சாத்தியப்படுத்துவதற்காகத் தான் வெர்லாக்கென் க்ரியேசன்ஸ் உங்களுக்கு இ-பிரவுச்சர் திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றது. வலைதள பக்கங்களில் இது சாத்தியம் தான். ஆனால் எத்தனை பேர் இணைய இணைப்பு பெற்றிருக்கிறார்கள்? இருந்தாலும் அவர்கள் உங்கள் வலைத்தளப் பக்கத்தை எங்ஙனம் பார்க்கத் தூண்டப் படுவார்கள்? அவர்கள் உங்கள் வலைத்தளத்தைப் பார்த்துவிடுவார்கள் என்பதற்கு எந்த உறுதியும் சொல்லிவிடமுடியாது! அப்படியே பார்த்தாலும், வலைதளகங்களில் வீடியோ காட்சிகள், எடுத்ததும் தங்கு தடையின்றி இயங்கிவிடுவதில்லை. அது இணையத்தின் வேகத்தைப் பொருத்த குறைபாடு.

ஆனால், இ-பிரவுச்சர் சிடிக்களாக உங்கள் தொழில் விளம்பரம் மற்றும் தகவல்களைக் கொடுத்துப்பாருங்கள். சிடியின் பவுச், சிடி ஸ்டிக்கர் இவற்றை உங்கள் நிறுவனத்திற்க்காக பிரத்தியேகமாக வடிவமைத்து, அதில் உங்கள் இ-பிரவுச்சர் சிடியை வைத்து வாடிக்கயளர்களுக்கு இலவசமாக கொடுத்துப் பாருங்கள். பல ஆயிரங்கள் செலவு செய்து உங்கள் பொருட்களையோ, உங்கள் சேவையையோ பெறப்போகும் அவர்களுக்காக வெறும் பத்து ருபாய் செலவு செய்துவிடமுடியும். குறைந்த பட்சம் அந்த சிடியில் என்ன இருக்கின்றது என்று அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவாவது அதை ப்ளே செய்து பார்பார்கள். அதுமட்டுமல்ல, உங்களைத் தேடி வரும் வாடிக்கையாளர்களிடம், அந்த சிடிக்களைப் போட்டுக்காண்பித்து, குறைந்த நேரத்தில் அவர்களுக்கு தேவையான தகவல்களை முழுமையாகவும், மனதில் பதியும்படியாகவும் எளிதில் புரியவைத்துவிடமுடியும். உங்களின் மார்க்கெட்டிங் எக்சக்குட்டிவ் அலுவர்களுக்கு இந்த சிடிக்களைக் கொடுத்து எல்லா ஊர்களிலும் உள்ள உங்கள் கிளையண்டிற்க்குப் போட்டுக் காட்டுங்கள். பிறகு பாருங்கள், தொழிற் துறையில் உங்களின் முன்னேற்றத்தை! இனி உங்கள் தொழிலில் நீங்கள் தான் நம்பர் ஒன்.

-------------------

இ-பிரவ்ச்சர் மாதிரிகள்


1. Power Health Systems, Madurai
வீடியோ அனிமேசன் - முகப்புப் பக்கத்தில்


ஒவ்வொரு பக்கத்திலும் அனிமேசன் ஹெட்டர் இடம்பெறுகிறது.

அனிமேட்டட் பட்டன்களுடன் படங்கள் இணைக்கப்பட்டபடி . . . .


------------

2.Beauty Velvettes, Madurai
தயாரிப்புகள் இடம்பெறும் பக்கம்




உப பக்கங்களுக்கான அலங்கரிக்கப்பட்ட அனிமேட்டட் பட்டன்களுடன் . . . .


சேவைகள் பக்கத்தில் பக்கங்களுக்கான பட்டன்களுடன் . . . .