வலைதள உருவாக்கம்


  • ஸ்டேடிக் மற்றும் டைனமிக் வலைதளப் பக்கங்கள்
  • கார்ப்பரேட் தர அனிமேட்டட் லே-அவுட்கள்
  • இணைய வழி தகவல் தரவு (Database - RDBMS) இணைப்பு
  • படங்கள், வீடியோ மற்றும் ஆடியோ இணைக்கும் வசதி
  • வலைதள பேனர் விளம்பர வடிவமைப்புகள்
  • இணைய மென்பொருள் தரவுகள் (Online Software Application)
[ மாதிரிகள் கீழே ]


உங்கள் தொழில் சம்பந்தமாக உங்கள் கிளையன்ட் ஒருவரை சந்திக்கிறீர்கள். உங்கள் உற்பத்திப் பொருள் அல்லது சேவைகள் குறித்த தகவல்கள் அனைத்தையும் சொல்லிவிடுகிறீர்கள். அவர்கள் உங்கள் பொருட்களையோ அல்லது சேவையோ ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். இரண்டு நாட்கள் கழித்து தொடர்பு கொள்வதாகச் சொல்கிறார்கள். உங்கள் தொலைபேசி எண்களை கொடுத்துவிட்டு வருகிறீர்கள். அவர்களும் இரண்டு நாட்கள் கழித்து தொடர்பு கொள்ள எண்ணும் போது உங்கள் தொலைபேசி எண்களை மறதோ அல்லது உங்கள் விசிடிங் கார்டை தொலைத்தோ விடுகிறார்கள். அவ்வளவு தான் இப்போது என்ன செய்வீர்கள்? அவர்கள் உங்களை தொடர்புகொள்ள முடியாமல் போவது மட்டுமல்ல கூடிய விரைவில் உங்கள் தொழில் குறித்து நீங்கள் அவர்களுக்கு அளித்த விளக்கங்களும் நாளடைவில் அவர்களுக்கு மறந்து போகும். ஆனால், உங்களுக்கு என்று ஒரு இணைய தளம் இருந்தால். . . . .

உங்கள் தோலைபேசி எண்களை மட்டுமல்ல எந்நேரமும் உங்களைப்பற்றின எந்த ஒரு விபரத்தையும் எவரும் உலகம் முழுக்க விரைவாகவும், பைசா செலவின்றியும் அறிந்துகொள்ள முடியும். இணைய இணைப்பு இருந்தால் மட்டும் போதும். நீங்கள் சொன்ன கருத்துக்களை இணையத்தில் இன்னும் விளக்கமாக அறிந்துகொண்டு உங்களை தொடர்புகொண்டு உங்கள் வாடிக்கையாளராக மாறிவிடுவார்கள். அவர்கள் மட்டுமல் . . . . இணையத்தில் உங்கள் பக்கங்களை பார்க்கும் அனைவருமே, உங்கள் வாடிக்கயாளராவதரற்கு ஒரு வாய்ப்பு. அதுமட்டுமா, உங்கள் வியாபாரம் எளிதில் உலகமயமாகிவிடுமே. . . .

இத்தனை பயனும் இருக்கும்போது உங்களுக்கு ஏன் இணைய பக்கங்கள் இருக்கக்கூடாது? உங்கள் நிறுவனம் குறித்த செய்திகளை, உங்கள் சாதனைகளை, உங்களின் பெருமைமிகு கிளையன்ட்கள் பற்றின விபரங்களை, உங்கள் பிராடக்ட், சேவைகள் குறித்த தகவல்களை, உங்களைத் தொடர்புகொள்ள வேண்டிய முகவரிகள், கிளைகள், தொலைபேசி எண்கள் என்று எந்த ஒன்றையும் விட்டுவிடாமல் நீங்கள் இணையத்தில் பதிவுசெய்துவிட்டாலே, உங்கள் வியாபாரத்தில் பெரும்பங்கு மார்கெட்டிங் பணிகளை உங்களின் இணையப் பக்கமே செய்துவிடும். நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களிடம் அவர்களுக்கு தேவையான தகவல்களை சுருங்கச் சொல்லிவிட்டு, மேற்படித் தகவல்களுக்கு உங்கள் இணைய தளத்தைப் பார்க்கச் சொன்னாலே போதும்!
இவ்வளவு பயனும் உள்ள ஒரு வூடகத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டாமா? வெர்லாக்கென் க்ரியேசன்ஸ் சிறந்த வடிவமைப்பு, தீம்களுக்குத் தகுந்தாற்போன்ற அனிமேஷன் வேலைகள், ஆடியோ, வீடியோ தகவல்கள், பார்வையாளர்களின் கருத்துக்களைப் பெரும்படியான வசதி, இணைய அப்பிளிகேஷன்கள் மூலம் உங்கள் தொழிலின் நிலையை எந்த ஒரு வினாடியிலும், எங்கிருந்தும் கண்காணிக்கும் வசதி, உங்கள் பிராடக்ட்டுகளை அழகிய வடிவில் டிஸ்ப்ளே செய்யும் வசதி, எந்த ஒரு தகவலையும் எளிதில் பெரும்படியான கட்டமைவு இப்படி பல்வேறு தளங்களில் நீங்கள் பயன்பெறும் வண்ணம் உங்களுக்கு இணையப் பக்கங்களை உருவாக்கித் தருகின்றது. வெர்லாக்கென் க்ரியேசன்ஸ் தொழில்நுட்ப ரீதியாக உங்கள் நிறுவனம் பெருவளர்ச்சிபெற கைகொடுக்கின்றது. போட்டியாளர்கள் மத்தியில் உங்கள் நிறுவனத்திற்கு தனித்துவத்தைப் பெற்றுத்தருகின்றது. உலகளாவிய வாடிக்கையாளர்களை வசமாக்கி, உங்கள் வியாபாரத்தை எல்லைகள் தாண்டி விரிவாக்கப் போகிறீர்கள். இவையனைத்தையும் வெர்லாக்கென் க்ரியேசன்ஸ் உங்களுக்கு சாதகமாக்கிவிடுகின்றது. இப்போது நீங்களும் சர்வதேச வியாபாரத்திற்கு தயார் தானே!

இணைய தளம் உருவாக்க இருப்பவர்கள் அறிதுகொள்ளவேண்டிய தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

வலைதள உருவாக்கம் - மாதிரிகள்







Bidz Plaza












வலைதள பேனர் விளம்பர வடிவமைப்புகள்