மோசன் கிராஃபிக்ஸ்


  • 30, 60, 120 வினாடிகளுக்குள் மிகச்சிறந்த கிராஃபிக்ஸ் காட்சிகள்
  • கேமரா, படப்பிடிப்புகள் அவசியம் இல்லை.
  • மாடல்கள் தேவையில்லை.
  • சாதாரண பொருளை பிரம்மாண்டமாகக் காட்டுவதும், கடிமான பொருளை எளிமையாகவே விளக்கிவிடுவதும் சாத்தியம்.
  • தொலைக்காட்சி விளம்பரங்கள், நிறுவன பிரமோக்கள், டைட்டில் கிராஃபிக்ஸ் என்று பலதரப்பட்ட விசுவல் வேலைகளுக்களுக்கும் மிகச் சிறந்த எஃபக்ட்டுகளுடன், துல்லியமான ஒளி, ஒலிக் கோர்ப்பு.
[ மாதிரிகள் கீழே ]

தொழிலை ஜனரஞ்கமாகப் பிரபலியப்படுத்த மிகச்சிறந்த வழி தொலைக்காட்சி விளம்பரங்கள். அதாவது Visual Ads. அப்படி நாம் காட்சி விளம்பரங்களை தயார் செய்யும் போது நாம் பலவற்றை பொருட்படுத்த வேண்டியதாக உள்ளது. விளம்பரம் எத்தனை வினாடிகள்?, தொழில், விளம்பரத்தின் நோக்கம், அதற்கேற்ற விளம்பரக் கரு, விளம்பரம் ஒளிபரப்பாகவிருக்கும் இடங்கள், விளம்பரத்திற்கு நாம் ஒதுக்குகிற அதிகபட்ச தொகை, நடிக நடிகையர்கள், செட்டிங்குகள், புறச் செலவுகள், எடிட்டிங் நுட்பங்கள் இப்படியாக இன்னும் பற்பல. இப்படி ஒரு விசுவல் விளம்பரத்தை எடுத்து முடிப்பது சுலபமான காரியம் அல்ல. அப்படி முற்றுமாக எடுத்து முடித்தபிறகு நினைத்தபடி விளம்பரம் வரவில்லை என்றால். . . . அதற்காக செய்த மொத்த செலவும் கேள்விக்குறிதான்.

மேற்கண்ட பிரச்சனைக்கான சுலபமான தீர்வு மோசன் கிராபிக்ஸ். ஆம்! வெர்லாக்கென் க்ரியேசன்ஸ் உங்களுக்கு மிகச் சிறந்த வழி காட்டுகிறது. காலம் மாறிக்கொண்டிருக்கின்றது. நாம் பார்க்கும் எந்தக் காட்சியையும் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் தத்ரூபமாக கண்முன் கொண்டுவந்துவிடுகின்றது. நடிகர்களை ஒருங்கிணைத்து, பல்வேறு பொருட்செலவு செய்து, பல கருவிகளை வரவழைத்து நாட்கணக்கில் சூட்டிங் செய்து எடுத்து முடித்ததும் ப்ரீ ப்ரொடக்சன், போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் எல்லாம் முடிந்து விளம்பரம் வெளிவருவதற்குள் பல பிரச்சனைகளை நாம் சந்திக்க வேண்டி இருக்கின்றது. ஆனால் மோசன் கிராபிக்சில் அதற்க்கெல்லாம் இடம் இல்லை. 

தேவையான காட்சி அமைப்புகளை உருவாக்கிக்கொள்வது, இல்லாத ஒன்றைக் கூட உருவாக்கி இருப்பது போல் காட்டுவது, நடக்க முடியாத ஒரு நிகழ்வை நடப்பது போலவே கண் முன் நிறுத்துவது, குறைவான பொருட் செலவு, தேவையான எஃபக்ட்கள், அளவான அவகாசம், அபரிமிதமான உருவாக்கம் என்று மோசன் கிராபிக்ஸ் உலகம் உங்களுக்கு எல்லா ஜாலங்களையும் வழங்கிவிடுகிறது. 

உங்கள் நிறுவனத்தின் பிரத்தியேக நிறத்திற்க்கேற்ப காட்சிப்படுத்துவது, தொழிலுக்கேற்ற விளம்பர ஸ்கிரிப்டை உருவாக்கி அதை சரியான முறையில் படமாக்குவது, சொல்ல வேண்டிய சாதாரண பொருளையும் பிரம்மாண்டமாகக் காட்டுவது, கடினமான பொருளை எளிமையாகவே விளக்கிவிடுவது இப்படி முழுமையாகவும் கேமராவோ, நடிகர்களோ இல்லாமலும், விளம்பரத்தை மிகச்சிறப்பாக வார்த்தெடுத்துவிடுகிறது கிராபிக்ஸ் தொழில்நுட்பம்.

இப்பேர்ப்பட்ட விளம்பரத்தை வெறும் எஃபக்ட்டாக மட்டுமே பயன்படுத்துவது மட்டும், புத்திசாலித்தனம் அல்ல. வெர்லாக்கென் க்ரியேசன்ஸ் சொல்ல வேண்டிய தகவலை கருவேற்றி, எளிமையாகவும், எல்லோருக்கும் புரியும் வண்ணமும், வித்தியாசமான முறையிலும் உருவாக்க உங்களுக்கு உதவுகிறது. எங்களின் மாறுபட்ட சிந்தனைகள் உங்களின் விளம்பரத்தை மக்களிடையே ஜனரஞ்சகமாகக் கொண்டு சேர்க்கிறது.  அதுமட்டுமல்ல எங்கள் இசைக்குழு உங்கள் விளம்பரத்திற்கு பிரத்தியேகமான இசையை உருவாக்குகிறார்கள். யாரிடமிருந்தும் காப்பி அடிக்காமல் உங்கள் விளம்பரத்திற்க்காகவே பிரத்தியேகமாக இசையமைக்கப்படுகின்றது. எங்களின் நிற ஒழுங்கு, காட்சி அமைப்பு, விர்ச்சுவல் கிராபிக்ஸ், ஒளி, ஒலிக் கோர்ப்பு உள்ளிட்ட ப்ரீ ப்ரொடக்சன் மற்றும் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் யாவும் உங்களுக்கு மிகச் சரியான, விரைவான மற்றும் தெளிவான விளம்பரத் தீர்வை வழங்கிவிடுகின்றன. இதுவே எங்களின் தனிச் சிறப்பு. 

அறுபது வினாடிகளில் ஆச்சரியப்படத்தக்க விளைவுகளை ஏற்ப்படுத்திவிட்டால் விளம்பரம் பேசும்படியாகவும், பெர்சொல்லும்படியாகவும் வந்துவிடும். அதை மறுபடியும், மறுபடியும் தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்தும் போது காட்சிகள் மனதில் பதிகின்றன. உலகம் நம்மைத் திரும்பிப் பார்க்கிறது. இப்போது உங்கள் நிறுவனத்தைத் தேடி வாடிக்கையாளர்கள் படையெடுத்துவிடுவார்கள் தானே! வாடிக்கையாளர்கள் அதிகரித்துவிட்டால், வியாபாரம் பெருகும்; வருமானமும் அதிகரிக்கும்; எங்களின் விளம்பரம் உங்களுக்கு அத்தோடு நன்மதிப்பையும், கெளரவத்தையும் சமுதாயத்தில் உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.


மோசன் கிராஃபிக்ஸ் மாதிரிகள்


பழநி பாலாஜி கருத்தரித்தல் மையம், பழநி

  • பிரத்தியேகமான விசுவல் படைப்பு
  • நேர்த்தியான 3D Object பயன்படுத்தப்பட்ட விளம்பரம்
  • கிராஃபிக்ஸூக்கு ஏற்ப பின்னொலித் தொகுப்பு
  • நிறுவனத்துவக்கம், சிகிச்சைமுறைகள், வசதிகள், சிறப்புகள்
  • 60 விநாடிகளில் தரம்குறையாத முழுமையான கிராஃபிக்கல் மற்றும் விசுவல் விளக்கம்


-----------


அன்னம்மாள் அசோசியேட்ஸ், மதுரை

  • அவசியத்தை உணர்த்தும்படியான கருத்தாக்கம்
  • தெளிவான காட்சிப்படுத்துதலுக்காக பிரத்தியேகமான மெனக்கெடல்கள்
  • அசத்தலான நிறுவன லோகோ துவக்கம்
  • பிரத்தியேகமான ஒலிக்கோர்ப்பு
  • இன்வெர்ட்டர்களுக்கான தீமிலேயே கிராஃபிக்கல் தகவல் விளக்கம்


-----------



ஃபிட்னஸ் எட்ஜ்
பவர் ஹெல்த் சிஸ்டம்ஸ், மதுரை





கேமரா விசுவல்களே இடம்பெறாத முழுமையான ஐந்தரை நிமிட கிராஃபிக்ஸ் காட்சிகள்
  • பிரம்மாண்டமான கிராஃபிக்ஸ் விசுவல்கள்
  • வித்தியாசமான கேமரா கோணங்கள்
  • செறிவான கருத்துருவாக்கங்கள்
  • நேர்த்தியான ஒலி, ஒளிக் கோர்ப்பு
  • அசத்தலான பிராடக்ட் டிஸ்பிளே





----------------

பாரத் க்ளீன், மதுரை

  • பிரமிப்பூட்டும் துவக்கம்
  • முத்தாய்ப்பான லோகோ பிராண்டிங்
  • கச்சிதமான தொழிற்தகவல் காட்சிப்பாடு
  • காட்சிக்கிணக்கமான இசைக்கோர்ப்பு


மதுரையின் முக்கிய திரையரங்கங்களான தங்கரீகல் மற்றும் வெற்றி திரையரங்கங்களில் அக்டோபர் 2010 மாதம் முழுக்க இடைவேளையின் போது திரையிடப்பட்டது. அக்டோபர் 1ம் தேதி அவ்விரு திரையரங்கங்களிலும் ஜனரஞ்சகமான பிரம்மாண்டமான எந்திரன் திரைப்படம் வெளியிடப்பட்டது குறிப்படத்தக்கது.

----


எந்திரன் சூளுரை
உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு கருத்துப்படம்
பொதுப்பணித் துறை, மதுரை மண்டலம், மதுரை.

காலேஜ் ஹியூமர் யூ-டியூப் தளத்திலிருந்து கருவும், விசுவல்களும் எடுத்துக்கொள்ளப்பட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. 
  • ஆடியோ எடிட்டிங்கில் புதுமை.



நன்றி - காலேஜ் ஹியூமர் தளம்

----------------

சாம்பல் துகள்கள் - கருத்துப் படங்களுடன் விழிப்புணர்வுக் கவிதைகள்
உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு குறும்படம்
பொதுப்பணித் துறை, மதுரை மண்டலம், மதுரை.


  • பிரத்தியேகமான டைட்டில் எஃபக்ட்
  • கருத்துச் செறிவுள்ள விழிப்புணர்வுக் கவிதை வரிகள்
  • செறிவுள்ள கருத்துருவாக்கங்கள்



----------------


மண்ணைத் தாண்டி வருவாயா?
உலக நீர் வள நாள் 2010 - உலக தண்ணீர் தின விழிப்புணர்வு செய்திப்படம்
பொதுப்பணித் துறை, மதுரை மண்டலம், மதுரை.
  • யூ-டியூப் காட்சிகள் பின்னணியில் ஈரம் பட தீம் மியூசிக்
  • இசையின் டெம்போவிற்கிணங்க வாசிக்கப்படும் வர்ணணை
  • கருத்து-வாசிப்பு-காட்சி கச்சிதமான ஒத்திசைவு
  • கிடைத்தற்கரிய காட்சிகளின் அணிவகுப்பு
  • வீரியமான உரைநடைப் பிண்ணனி
செய்திப்படம் தவிர்த்து முன் கருத்துப்படம் மட்டும் இணைக்கப்பட்டது.






22.03.2010 அன்று நடைபெற்ற உலக நீர் வள நாள் 2010 விழிப்புணர்வுக் குறுந்தகடு வெளியீட்டு விழாவில் பொதுப்பணித் துறை, மதுரை மண்டலம், மதுரையின் தலைமைப் பொறியாளர் பொறி.பெ.இராமமூர்த்தி பி.இ. அவர்கள் குறுந்தகட்டை வெளியிட மதுரை நீர்நில வட்ட கண்காணிப்புப் பொறியாளர் பொறி.கி.தி.பாலன் பி.இ.அவர்கள் குறுந்தகட்டைப் பெற்றுக்கொண்டார்.

----------------

Everlast IT 2009 - National Level Technical Symposium
பி.டி.ஆர். பொறியியல் கல்லூரி, மதுரை.

சொல்ல வேண்டிய கருத்துக்கள் கொடுக்கப்பட்ட வினாடிகளுக்குள் அளவான எஃபக்ட்டுகளுடனும், பின்னணி வர்ணனையுடனும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது.



----------------


2010ல் ஈரோடு செங்குந்தர் கல்லூரியில் நடைபெற்ற National Level Multimedia Creative Competition போட்டியில் வெர்லாக்கென் கிரியேசன்ஸால் தயாரிக்கப்பட்டு, கே.எல்.என். கல்லூரி, மதுரை மாணர்வகள் சார்பில் சமர்பிக்கப்பட்டு இரண்டாம் பரிசு பெற்ற கருத்துருவாக்க கிராஃபிக்ஸ் சித்திரம்.